உலகளாவிய கணக்கெடுப்பின் அறிக்கையில் இடம்பிடித்த இலங்கை
குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்ட நாடுகளில் உலகளாவிய கணக்கெடுப்பின்படி இலங்கை 10வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் 85 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளதோடு அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை இந்த கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.
சுறுசுறுப்பு, கலாசார செல்வாக்கு, தொழில்முனைவு, பாரம்பரியம், நகர்வுகள், வணிகத்திற்கான திறந்தநிலை, சக்தி, சமூக நோக்கம் மற்றும் வாழ்க்கைத் தரம் என்பனவும் இந்த தரப்படுத்தலில் செல்வாக்கை செலுத்தியுள்ளன.
இந்தியா முன்னணியில்
இந்த கணக்கெடுப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன்படி, முறையே இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ், இந்தோனேசியா,கம்போடியா, மலேசியா, இலங்கை என்ற அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தகம், பயணம், முதலீட்டை உந்துதல் மற்றும் தேசியப் பொருளாதாரங்களின் நேரடியாக தாக்கம் செலுத்தும் திறன் கொண்ட பல தரமான குணாதிசயங்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.