2025இல் நுகர்வோர் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த கார் இது தான்....!
2025ஆம் ஆண்டு கார்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றங்களை கண்ட ஆண்டாகும்.
வாடிக்கையாளர்களின் மதிப்பீடுகள், நம்பிக்கை, செயல்திறன் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு நுகர்வோர் அறிக்கைகள் அதன் வருடாந்த பிராண்ட் தரவரிசைகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் 05 இடத்தை பிடித்துள்ள கார்களின் பிராண்டுகள் பற்றி பார்கலாம்.
நுகர்வோர் அறிக்கை
2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் அறிக்கையின் தரவரிசைப்பட்டியலில் சுபாரு (Subaru) முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
இது, வாகன ஓட்டுநர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதுடன் Crosstrek மற்றும் Outback போன்ற மாடல்கள் மிகவும் பிரபலமானவை.
பைலட் டிரைவிங் அனுபவத்தை கொண்ட பிஎம்டபிள்யூ (BMW) நுகர்வோர் அறிக்கையின் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இதில், X5 மற்றும் 3-Series போன்ற மாடல்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.
இதையடுத்து, ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் முன்னணியான லெக்சஸ் (Lexus) நுகர்வோர் அறிக்கையின் தரவரிசைப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதில், Lexus ES மற்றும் RX போன்ற மாடல்கள் பிரபலமானவை.
ஐந்தாவது இடம்
இதனை தொடர்ந்து, நுகர்வோர் அறிக்கையின் தரவரிசைப்பட்டியலில் போர்ஷ் (Porsche) நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இதில், Porsche 911 மற்றும் Macan போன்ற மாடல்கள் பிரபலமானவை.
இந்நிலையில், பாரம்பரிய நம்பிக்கை என அழைக்கப்படும் ஹோண்டா (Honda) நுகர்வோர் அறிக்கையின் தரவரிசைப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதில், Honda Civic, Accord மற்றும் CR-V போன்ற மாடல்கள் பிரபலமானவை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |