மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
எடுத்த வேலை வெற்றியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தடைபட்ட வேலை முடியும். குடும்ப நெருக்கடி குறையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
தம்பதிக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவு விலகும். லாப ராகுவும் சனியும் வருமானத்தை அதிகரிப்பர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு வெளிப்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
நினைத்த வேலை நடக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்
செவ்வாய் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றாலும், திங்கள் வரை சூரியனால் நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும்.
சனி, ராகு, கேது என மூவரும் செல்வாக்கை உயர்த்துவர். முயற்சிகளை வெற்றியாக்குவர். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.
வாழ்வில் வளம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலையில் மாற்றம் வரும்.

கன்னி
எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசுவழி வேலைகளில் இலாபம் உண்டாகும்.
சனி, ராகு பகவானால் செல்வாக்கு உயரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் மனம் மாறுவர். அதிர்ஷ்ட வாய்ப்புகளால் உங்கள் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.
செவ்வாய் பகவானால் உழைப்பு அதிகரிக்கும். கடும் முயற்சிக்குப்பின் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

துலாம்
இதுவரை தடைபட்டிருந்த வேலைகளை செவ்வாய் பகவான் நடத்தி வைப்பார். புதிய சொத்து சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.
ராகுவும், சனியும் நெருக்கடிக்கு ஆளாக்குவர். இருந்தாலும் கேது உங்கள் நன்மையை வழங்குவார். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
குரு வக்கிரத்தினால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ராசியாதிபதி சுக்கிரனால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். பழைய கடன்களை அடைப்பீர்.
தனுசு
எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரிகளுக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பொன் பொருள் சேரும்.
செலவு அதிகரிக்கும். அவை தேவையானதாக இருக்கும். ஒருசிலர் பூமி, வீடு என்று வாங்குவீர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்