பீலேவை நினைவுகூறும் கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை - உலக தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல்
பீலேவின் மறைவுக்கு உலக தலைவர்கள் உற்பட பலரும் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
லண்டனில் ரியோவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை மற்றும் லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியம் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரேசிலிய கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 1940 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
பிரேசில் தேசிய அணி
பீலே தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட ஆரம்பித்தார். சிறுவயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16 வது வயதில் இடம் பெற்றார்.
இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் 1958 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார்.
இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார். இதனை அடுத்து 1962 ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார்.
இதனை அடுத்து இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது.
Pelé was one of the greatest to ever play the beautiful game. And as one of the most recognizable athletes in the world, he understood the power of sports to bring people together. Our thoughts are with his family and everyone who loved and admired him. pic.twitter.com/urGRDePaPv
— Barack Obama (@BarackObama) December 29, 2022
1970 ஆம் உலக கோப்பையில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்கு மீண்டும் கோப்பையை வென்று தந்தார்.
இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது.
A great loss to not just football but to the whole world of sports. There will never be another!
— Sachin Tendulkar (@sachin_rt) December 30, 2022
Your legacy will live on forever.
Rest in Peace Pele! ♥️ ⚽ pic.twitter.com/Nv0CFQVEpf
இந்த சாதனை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.கால்பந்து அரசன் என்று அறியப்பட்ட பீலே இதுவரை 1279 கோல்களை தனது கால்பந்து வாழ்க்கையில் புகுத்தியிருக்கிறார்.
We mark the passing of the legendary Pelé, known to many as the king of the "beautiful game." This image of a spiral galaxy in the constellation Sculptor shows the colors of Brazil. pic.twitter.com/sOYfKdTeAJ
— NASA (@NASA) December 29, 2022
பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார்.
அரசியல் வாழ்க்கை பீலே வின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல அரசியல் கட்சிகள் அவரை தேர்தலில் களம் இறக்கியது. இதில் பீலே 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.
For a sport that brings the world together like no other, Pelé’s rise from humble beginnings to soccer legend is a story of what is possible.
— President Biden (@POTUS) December 29, 2022
Today, Jill and I's thoughts are with his family and all those who loved him. pic.twitter.com/EkDDkqQgLo
பீலேக்கு தனது முதுமை வயதில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்த அதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Without Pelé there may not have been a Neymar.
— ESPN FC (@ESPNFC) December 29, 2022
His legacy lives on in the players he inspired for decades.
The giant whose shoulders the modern greats stand on. pic.twitter.com/puOMf5NCyQ
வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு பீலே வின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த நவம்பர் 29ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீலே ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு தனது உயிரை இழந்தார்.
அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மர் ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Football has lost one of its greatest ambassadors. Pele was amongst the rare breed of sportsmen - legend both on and off the field.
— Rahul Gandhi (@RahulGandhi) December 30, 2022
My condolences to his family and fans across the world. pic.twitter.com/MXYaa2u5Ye
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
