அசுர வேகத்துல காடு மாதிரி முடி வளர...! Top 5 எண்ணெய்கள்
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை பெருவதற்கான எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்பது தொடர்பில் இப்பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் சிறந்த ஒரு இயற்கை ஊட்டச்சத்து ஆகும்.

இதில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரதத்தை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது.
மேலும், தேங்காய் எண்ணெய் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து முடி உலர்ந்து போவதைத் தடுக்கும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
இவை, முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து மென்மையாகவும் மினுமினுப்பாகவும் மாற்றுகிறது.
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது.

இதனால் முடி உதிர்வு படிப்படியாக குறைந்த முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மேலும் ரோஸ்மேரி எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் இது உங்கள் உச்சந்தலையில் அரிப்பு, வீக்கம் உளிட்டம் பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
திராட்சை விதை எண்ணெய்
திராட்சை விதை எண்ணெயில் வைட்டமின் ஈ, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் லினோலிக் கொழுப்பு அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதனால் முடி வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும்.
லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

லாவெண்டரின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் எந்த பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
இதனால் பொடுகு, பேன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |