அவுஸ்திரேலியா அணிக்கு சவாலாக மாறிய கில் - டெஸ்ட் அரங்கில் மற்றுமொரு சாதனை..!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நாணயசுழட்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 480 ஓட்டங்களை பெற்றது.
சுப்மன் கில் சதம்
இதையடுத்து முதலாம் இன்னிங்ஸை ஆரம்பித்து துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 200 ஓட்டங்களுக்கு 2 ஆட்டமிழப்புகளை சந்தித்து வலுவான நிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் சுப்மன் கில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
டெஸ்ட் அரங்கில் அவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
அவுஸ்திரேலியா அணி:
டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
