உலக உணவு பாதுகாப்பில் பின்தள்ளப்பட்ட இலங்கை - 160 ரூபாவிற்கு அரிசி இறக்குமதி
உலக உணவு பாதுகாப்பில் 65 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 75 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக சமகி ஜன பலவேக கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
இன்று (6) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கூறியவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வெளிநாடுகளில் இருந்து ஏழு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.
160 ரூபாவிற்கு அரிசி இறக்குமதி
இதனால் விவசாயிகள் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்து முக்கிய ஆலை உரிமையாளர்கள் 160 ரூபாவிற்கு அரிசியை இறக்குமதி செய்து அரிசி 220 ரூபாவிற்கு விற்கின்றனர்.
அதிக விவசாயிகள் உள்ள பொலன்னறுவை இன்று போசாக்கு குறைபாடுள்ள மாவட்டமாக மாறியுள்ளது. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய நூறு ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால் ஒரு கிலோ நெல் தொண்ணூறு ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது.”என தெரிவித்திருந்தார்.
