பாலியல் சர்ச்சையில் சிக்கிய டொரான்டோ மேயர்! ஆசிய பெண் காரணம்?
கனடா நாட்டின் மிகப்பெரிய நகரமான டொரன்டோவின் மேயர் John Tory, தனது முன்நாள் பெண் ஊழியர் ஒருவருடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பதவி விலகியுள்ளார்.
மேயரின் ஆலோசகராகக் கடமையாற்றிய 31 வயது இளம் பெண்ணுடன் மேயர் வைத்திருந்த உறவை உள்ளூர் ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்தே, தனது தவறை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், 68 வயதான டொரன்டோ மேயருடன் பாலியல் தொடர்பை வைத்திருந்ததாக கூறப்படுகின்ற இளம் பெண் ஒரு ஆசிய பெண் என்று கனடா வட்டாரங்கள் கூறுகின்றன.
டொரன்டோ மேயர் John Tory, கனடாவின் 31 வயது ஆசிய பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாகவும், பின்னர் குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு பிரபல்யமான ஒரு நிறுவனத்தில் உயர் பதவி பெற்றுக்கொடுத்திருந்ததாகவும், உர்ஜிதப்படுத்தப்படாத கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.