Torontoமேயர் தேர்தல்! பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு
கனடா - Toronto மேயர் தேர்தலில் போட்டியிடும் பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford), வரிச்சலுகைகள், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் நகரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
மேயராகத் தெரிவுசெய்யப்பட்டால் நிலப் பரிமாற்ற வரியைக் குறைப்பதற்கான அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகள், முதல் ஆண்டில் சொத்து வரியை உயர்த்தாமல் வைத்திருத்தல் மற்றும் 1,000 புதிய காவல்துறை அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.
பிராட் பிராட்ஃபோர்ட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அவரது தேர்தல் வாக்குறுதிகள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நகரப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
நகராட்சி நிதி நிர்வாகம்
மேலும், நகராட்சி நிதி நிர்வாகம் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு தொடர்பான விவகாரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் பிராட் பிராட்ஃபோர்ட்க்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் கருத்துக் கணிப்புக்களில் பிராட் பிராட்ஃபோர்ட் ஏற்கனவே முன்னணி வகிக்க ஆரம்பித்துவிட்டார் என கூறப்படுகிறது.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பிராட் பிராட்ஃபோர்ட் மேயராக பதவியேற்றதும் நிலப் பரிமாற்ற வரியை நீக்குவதாக உறுதியளித்தமை வாக்காளர் மத்தியில் ஆதரவை அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் குடியிருப்பாளர் 18,000 டொலர்கள் வரை சேமிக்க முடியும்.
மேலும் தண்ணீர்க் கட்டணத்தில் மாற்றங்களோடு, பதவியேற்ற முதல் ஆண்டில் சொத்து வரியை உயர்த்தாமல் வைத்திருப்பதாகவும் தேர்தல் உறுதிமொழியில் கூறியுள்ளார்.
கடந்த மேயர் ஆட்சிக் காலத்தில் நகரின் பாதுகாப்பு மோசமடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அதிரடியாக 1,000 காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் தனது எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அதிகரித்து வரும் செலவீனங்கள்
அதிகரித்து வரும் செலவீனங்களால் மக்கள் படும் சிரமங்கள் குறித்த கவலை எதுவுமில்லாமல் மேயர் ஒலிவியா சோ நிதி விரயங்களை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக Toronto மாநகரசபை உறுப்பினர்களுக்கு 2025ஆம் ஆண்டு மேயர் ஒலிவியா சோவால் 24வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதை Toronto மக்கள் ஆதரிக்கவில்லை.
இந்நிலையில் மக்களோடு மக்களாக ஊதிய உயர்வை எதிர்த்தவர்களில் பிராட் பிராட்ஃபோர்ட் ஒருவராக மக்கள் தனது கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி Torontoவுக்கான நகராட்சித் தேர்தல் திங்கள் கிழமை ஒக்டோபர் 26ந்திகதி காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் Torontoவின் எதிர்கால நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் பங்கேற்பும் வாக்குகளும் முக்கியத்துவம் பெறுவதாக ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |