36 வருட கனவு நனவானது அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் ரூபா 560 கோடியை வென்ற ரொறன்ரோ வாசி
36 வருட கனவு நனவானது
கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் 36 ஆண்டுகளாக ஒரே எண்களில் அதிஷ்டலாப சீட்டிழுப்புக்களை சீட்டுக்களை வாங்கி வந்துள்ளார். அவரது கனவும் ஆசையும் பலிக்கும் விதமாக அதே எண்ணில் இப்போது அவருக்கு இலங்கை ரூபாவில். 560 கோடி பரிசு விழுந்துள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோவில் வசிக்கும் ஸ்டீபன் டிக்சன், 36 ஆண்டுகளாக ஒரே மாதிரியான வாங்கி வந்த நிலையில், இப்போது லோட்டோ 6/49 ஜாக்பாட்டில் 20 மில்லியன் கனேடிய டொலர்களை ( இலங்கை பணமதிப்பில் ரூ.563 கோடி) பரிசாக வென்றுள்ளார்.
"நான் இந்த எண்களை Wintario வுடன் விளையாடத் தொடங்கினேன், பின்னர் அவற்றை Lotto 6/49-க்கு மாற்றினேன். நான் விளையாடும் எண்கள் குறிப்பிடத்தக்க குடும்ப திகதிகள்" என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் (OLG) வெளியீட்டில் கூறினார்.
நம்பாத மனைவி
டிக்சன் தனது மனைவியிடம் தான் பரிசை வென்றதாக முதலாவதாக சொன்னபோது, அவர் முதலில் $20,000 மதிப்புடையதாக நினைத்தார். அது $20 மில்லியன் என்று அவரிடம் தெரிவித்தபோது, அவர் தன்னை நம்பவில்லை என்றார்.
"நான் அவளிடம் விளையாடுகிறேன் என்று நினைத்தாள்" என்று அவர் கூறினார்.
ஸ்கார்பரோவில் உள்ள எல்லெஸ்மியர் சாலையில் உள்ள சன்ஸ்டார் கன்வீனியன்ஸில் வாங்கப்பட்ட டிக்கெட்டைச் சரிபார்க்கும்படி மகன் நினைவூட்டிய பிறகு தான் வெற்றி பெற்றதைக் கண்டுபிடித்ததாக டிக்சன் கூறுகிறார்.