கனடாவின் ரொரண்டோ தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி
கனடாவின் ரொரண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற வருடாந்திர கலாசார திருவிழாவான "சல்சா ஆன் செயின்ட் கிளேர்" தெரு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நால்வர் படுகாயமடைந்தனர்.
இவ்விழாவில் ஏராளமான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தப்பியோடிய துப்பாக்கிதாரி
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு
குற்றவாளி இன்னும் பிடிபடாததால், அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
டொராண்டோவின் மிகவும் பிரபலமான வருடாந்திர கலாச்சாரக் கொண் டாட்டங்களில் ஒன்றாக சல்சா ஆன் செயின்ட் கிளேர் திருவிழா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |