தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம் : அதிர்ச்சியில் காவல்துறையினர்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Kalutara
                
                                                
                    Southern Province
                
                                                
                    Drugs
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    தென்னிலங்கையில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதை கூடம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.
இதன்போது வீட்டில் கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.
    
    "தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது" மத்திய அரசு திட்டவட்டம்
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்