இந்த வருடத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! சடுதியாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை
Sri Lanka Economic Crisis
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By pavan
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 21 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர் எனவும், செப்டெம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 பயணிகளே வருகை தந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை
இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே மிகவும் குறைந்தளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதேவேளையில் தற்போது இலங்கையில் அந்நியச்செலாவணி குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி