வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் செயல்: கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை
மலையக பிரதான தொடருந்துகளில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரைவு தொடருந்துகளின் மிதிப் பலகைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் மிதிப் பலகைகளில் ஏறி புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு அதில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய சம்பவத்தில், ஒஹிய தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (21) பொடி மினிகே விரைவு தொடருந்தில் இருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தடுப்பதற்கு நடவடிக்கை
இந்நிலையில், அபாயகரமான பயணத்தை சுற்றுலா பயணிகள் மேற்கொள்வதை தடுக்க தொடருந்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |