இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் 27,884 வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 13,980 சுற்றுலாப் பயணிகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தையும், 8,776 வருகைகளுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
அதிகபட்ச மாதாந்திர வருகை
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாகவும் இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து 3,66,114 பயணிகள் வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 1,44,381 பயணிகளும், சீனாவில் இருந்து 97,073 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்திர வருகைகளில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |