இலங்கைக்கு விரையும் பெருந்தொகை சுற்றுலா பயணிகள்
2025 ஜனவரியின் முதல் 22 நாட்களில் 177,400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ( SLTDA)கூற்றுப்படி, ஜனவரி 01 முதல் 22 வரை மொத்தம் 177,403 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருதை தந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 30,847 ஆகும்.
ஏனைய நாடுகள்
இதேவேளை, ரஷ்யாவிலிருந்து மொத்தம் 25,608 பேர், பிரித்தானியாவிலிருந்து 14,959 பேர், ஜெர்மனியிலிருந்து 10,873 பேர் மற்றும் சீனாவிலிருந்து 9,337 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும், பிரான்சிலிருந்து 8,340 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 6,851 பேர், அமெரிக்காவிலிருந்து 5,202 பேர், போலந்திலிருந்து 5,194 பேர் மற்றும் நெதர்லாந்திலிருந்து 4,708 பேர் வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |