இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை நெருங்கியுள்ளது
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செலாவணி
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தை இலங்கையினால் ஈட்ட முடிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான வளர்ச்சியை அடுத்து, 2026 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்படும் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்றும் இணை அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |