யாழை வந்தடைந்த இந்திய சுற்றுலா சொகுசுக் கப்பல்
Jaffna
Sri Lanka
India
Tourism
By Laksi
இந்தியா (India) - சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கையை (Sri Lanka) வந்தடைந்துள்ளது.
சுற்றுலா சொகுசுக் கப்பலில் 800க்கும் மேற்பட்ட பயணிகளை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் இந்தியாவிற்கு பயணம்
இந்த கப்பலானது நேற்று முன்தினம் (17) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் (18) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த பயணிகள் கப்பல் இன்று (19) காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
அத்தோடு, இந்த சுற்றுலா சொகுசுக் கப்பலானது இன்று (19) பிற்பகல் மீண்டும் இந்தியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி