இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - விமான நிலையத்திலும் ஏற்படவுள்ள மாற்றம்
srilanka
airport
tourist
prasanna ranathunga
By Sumithiran
இம்மாதத்தின் 15 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ அண்மித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதன் காரணமாக நெரிசலை தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதரும் போது முதலில் கவரப்படும் இடம் விமான நிலையம் என்பதால் அதனை மிகவும் வசதியான இடமாக மாற்றியமைப்பது முக்கியமென அமைச்சர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
