எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும் சுற்றுலா பயணிகள்
srilanka
tourist
fuel
nuwara eliya
queue
By Sumithiran
இலங்கையில் எரிபாருளை பெற்றுக்கொள்ள சுற்றுலா பயணிகளும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வார இறுதியில் (26ஆம் திகதி) நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் சாரதிகள் நுவரெலியாவிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நின்றுள்ளனர்.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து குறைந்தளவு எரிபொருளை வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்