மரநடுகை வாரம்: றீ(ச்)ஷாவால் வழங்கப்படவுள்ள 2000 கறுவா கன்றுகள் (காணொளி)
வடக்கு மாகாண சபையால் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மரநடுகை வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் குடும்பங்களுக்கு தலா இரண்டு வீதம் 2000 ஆயிரம் கறுவா கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
கிளிநொச்சி இயக்கச்சியிலுள்ள ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் கிளிநொச்சி மருதுநகர், பன்னங்கண்டி, அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் கறுவா கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் ஊழியர்களினால் மக்களுக்கு கறுவா கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.ஆயிரம் குடும்பங்களுக்கு தலா இரண்டு வீதம் 2000 கறுவா கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் நாளை மறுதினம் இயக்கச்சியிலும் கறுவா கன்றுகள் வழங்கும் செயற்திட்டம் மேலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
