பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் : பதில் காவல்துறைமா அதிபர்
43 காவல்துறை களங்கள் மாத்திரமே பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த வருட தரவு பகுப்பாய்வு மூலம் அது தெரியவரும் என பதில் காவல்துறைமா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட மக்கள் பாதுகாப்பு செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
போலி கடவுசீட்டு
“பாதாள உலகை ஒழிக்க வேண்டுமானால் தென் மற்றும் மேல் மாகாணங்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.
43 காவல்துறை களங்களில் மட்டுமே பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உதவுங்கள்... இன்னும் சில மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பேன்.
ஜனவரிக்குப் பிறகு, பாதாள உலகத்துடன் தொடர்புடைய 1091 பேர், போலி கடவுசீட்டுகளுடன் விமான நிலையத்துக்குச் செல்ல முடியாது.” என்றார்.
இதேவேளை, திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |