சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை மோதித் தள்ளியது சொகுசு கார்
நேற்று (15) பிற்பகல் சொகுசு காரொன்று மோதியதில் களுத்துறை - பண்டாரகம வீதியில் கடமையாற்றிய மொறொந்துடுவ காவல்துறை போக்குவரத்துப் பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொரந்துடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் சிறிய பாரவூர்தியை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, பண்டாரகமவிலிருந்து வந்த சொகுசு கார் அருகில் இருந்த பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளாகி பாரவூர்தியுடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் காவல்துறை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்த மற்றைய காவல்துறை உத்தியோகத்தர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக வீதியின் கலனிகம நுழைவாயிலில் இருந்து கார் வெளியில் வந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்தது.சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
காவல்துறை பொறுப்பதிகாரி கெலும் சில்வாவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
