காவல்துறை உத்தியோகத்தருக்கு ஆப்பு வைத்த ஓட்டுநர் - வைரலாகும் காணொளி
driver
viral video
trouble
Traffic police officer
By Vanan
கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உத்தியோகபூர்வ சீருடையுடன் செருப்புகளை அணிந்துகொண்டு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், அவரது நிலையை காணொளியாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்தகவல் காவல்துறை திணைக்களத்திற்கு செல்லவே, குறித்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையையும் காவல்துறை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்