காரால் நேர்ந்த துயரம்: 3 வயது குழந்தை பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.
இந்த விபத்து நேற்று (20) மதியம் ஏத்கால காவல்துறை பிரிவிற்குட்பட்ட கம்பளை - நாவலப்பிட்டி வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஏத்கால காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி