யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம்
இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்தவராவார்.
இரட்டை குழந்தை பிரசவம்
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தைகளை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.
திடீரென சுகவீனம் ஏற்பட்டு
தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |