இன்றுகாலை இடம்பெற்ற துயரம் - மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
தனது சகோதரியை ஆடைத்தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சகோதரர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் பலியாகியுள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் நாவலபிட்டி துங்கல வேவேகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய. ஏ.தரிந்து வீரசிங்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் லொறியில் மோதுண்டு உயிரழந்தாரா அல்லது பேருந்தில் மோதுண்டு உயிரிழந்தாரா அல்லது வீதியில் மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி பலியானாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.