யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து முதியவரை மோதித்தள்ளியது
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
Death
Train
By Independent Writer
Courtesy: kapil
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று(28) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்றுமாலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து , தோணிக்கல் ஆலடி புகையிரதகடவையில் சென்றுகொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றது.
தொடருந்து கடவையை கடக்க முற்பட்டவேளை அனர்த்தம்
விபத்தில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்தவாரம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்