வடக்கு தொடருந்து சேவையில் தடங்கல்....! வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (Sri Lanka Railways) தெரிவித்துள்ளது.
மஹவ சந்தியில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் தொடருந்து சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதை திருத்தப் பணிகள்
கொழும்பு (Colombo) - யாழ்ப்பாணம் (Jaffna) தொடருந்து நேரத்தை குறைக்கும் வகையில் வடக்கு தொடருந்து பாதையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த திருத்தப்பணி நிறைவடைந்தால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் 5.5 மணித்தியாலங்களுக்குள் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியும்.
இதற்காக, வடக்கு தொடருந்து பாதையை நிறுத்தி கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10 மாதங்களாக திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தன.
மில்லியன் அமெரிக்க டொலர்
எனினும், தற்போது தொடருந்து பாதையின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட தொடருந்து சேவைக்குத் தேவையான சமிக்ஞைகளை பொருத்தாத காரணத்தினால் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
91.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திருத்தப்பட்ட மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் 66.4 கிலோமீட்டர் தூரத்திலான மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான பகுதியில் சமிக்ஞைகள் நிறுவப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |