உடன்பட மறுக்கும் உயர் அதிகாரிகள் - ரணில் எடுத்த அதிரடி முடிவு
Presidential Secretariat of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Budget 2023
By Vanan
வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி செய்யாத அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு ஜனவரி மாதமளவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான செயலாளர்களின் பெயர்ப் பட்டியலை அதிபரின் செயலாளரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்ட தயாரிப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களிடம் இதற்கான பணிப்பை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குச் சில செயலாளர்கள் உதவவில்லை என்று சில அமைச்சர்கள் அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்தே அதிபர் மேற்படி முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி