தமிழ் மக்களுக்கான நிலைமாறுகால நீதியை இழுத்தடிக்கும் சிறிலங்கா அரசு
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான நிலைமாறு கால நீதி வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நிலைமாறுகால நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இனப்படுகொலை
இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது குற்றமாகாது என அவர் கூறுகிறார்.
இனப் படுகொலை என கூறுவோரை கைதுசெய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போரில் மரணித்தவர்களை பொதுவெளியில் நினைவுகூரக் கூடாது என ராஜபக்ச ஆதரவு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களையும் முன்னாள் ஆணையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
