சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா வைரஸ் - எச்சரிக்கை தகவல்
Influenza
By Vanan
இலங்கையில் சிறுவர்களிடையே இன்புளுவன்சா A வைரஸ் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்
இன்றைய நாட்களில் பகலில் அதிகமாக உடல் வியர்ப்பதால் சிலருக்கு உடல் உபாதை, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
வேலை செய்ய முடியாத நிலை போல இருக்கலாம். அதனால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி