அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள்
அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ( Dilum Amunugama ) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த வாரம் முதல் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதி மீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அறவிட்ட கட்டணத்தை அறவிடும் வகையில் புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சுகாதார விதிகளை மீறும் அனைத்து பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, காவல்துறை மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பல பகுதிகளில் சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
