தளர்த்தப்படவுள்ள கட்டுப்பாடுகள் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
corona
sri lanka
people
By Shalini
பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பொது பேரணிகள், கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு சட்டங்கள் தொடர்ந்து அதே முறையில் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், 21 ஆம் திகதி காலையில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி