லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

Sri Lankan Tamils Tamils London World
By Shalini Balachandran May 03, 2026 09:10 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது விடுதலைக்காக சமராடி வீரகாவியமான மாவீரரகளுக்கன வீரவணக்க நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்றன .

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிநினைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக 24 மாவீரர்களுக்கன வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த நிகழ்வு 2026 மே இரண்டாம் திகதி அன்று லண்டன் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெற்றது.

விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்...!

விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்...!

மாவீரர்களின் தியாகங்கள் 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிச் சமரில் தாம் வரித்துக் கொண்ட இலட்சியத்தில் உறுதிதளராது தமிழீழ விடுதலைக்காக சமராடி வீரகாவியமான மாவீரர்களை உறுதிப்படுத்தி வெளிப்படுத்தி அவர்களை மாவீரர் மாண்போடு தாயகம் மற்றும் தமிழர் வாழும் தேசமெங்கும் தம் நெஞ்சங்களில் நினைவுகூரும் வகையில் வீரவணக்க நிகழ்வுகளை தமிழீழ மாவீரர் பணிமனை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக களமுனையில் செயற்பட்ட போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் தாயக மக்களின் பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் முன்னெடுத்து வருகின்றது.

லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! | Tribute To 24 Maaveerar Held In London Oxford

அந்த வகையில் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைக்காக இறுதி வரை களமாடி வீரகாவியமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் படைத்துறையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான பொட்டு அம்மான், முதுநிலைப் போராளியும் புலனாய்வுத்துறையின் துணைப் பொறுப்பாளரும் மூத்த போராளியுமான கபிலம்மான், நிதித்துறை இளவேனில் வாணிப பொறுப்பாளர் நியூட்டன் , அனைத்துலக செயலக பொறுப்பாளர் காஸ்ரோ, புலனாய்வுத்துறை மகளீர் ஒருங்கிணைப்பாளர் பாமினி (மாவீரர் சந்திரனின் துணைவியார்), படைய புலனாய்வு பிரிவு மகிளீர் போராளி நளா (பிரிகேடியர் ஜெயம் அவர்களின் துணைவியார்), காவல்துறை மாவீரர் ஜெனீவாகரன், கடற்புலி மாவீரர் புகழொளி, கட்டளை தளபதி முகுந்தன், முறியடிப்பு பிரிவு கட்டளை தளபதி மாஸ், புலனாய்வுத்துறை அலுவலகப் பொறுப்பாளர் கதிர் ஆகியோருக்கு நனைவேந்தல் மன்னெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

அணிவகுப்பு மரியாதை

மேலும், புலனாய்வுத்துறை தாக்குதல் அணித் தளபதி குமணன், புலனாய்வு துறை வெளியக பணிமனை பொறுப்பாளர் மேதினி ( மாவீரர் கபிலம்மான் அவர்களின் துணைவியார்), ராதா படையணி தாக்குதல் தளபதி தமிழ்வண்ணன் அல்லது வண்ணம், ராஜன் கல்வி பிரிவு பொறுப்பாளர் குமரன், அரசியல்துறை போராளி அன்பரசன், ராதா படையணி சிறப்பு தளபதி சிலம்பரசன் அல்லது சிலம்பு, தமிழீழ தேசியத் தலைவரின் மெய்காப்பாளர் அணிப் பொறுப்பாளர் சுவர்ணன், கடற்புலிகளின் தென் தமிழீழ தளபதியும் இறுதிப் போர்க்களமுனை தளபதியுமான சிறிராம், புலனாய்வு துறையின் வெளியக நடவடிக்கையின் பகுதி பொறுப்பாளர் அன்பு, கணினி பிரிவு போராளிகளான துவாரகா (தமிழீழ தேசியத் தலைவரின் மகள்), பார்த்தீபன் (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானின் மகன்), மான்மதி (பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மகள்), தமிழ்மதி (அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகள்) ஆகியோருக்கும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு! | Tribute To 24 Maaveerar Held In London Oxford

இதையடுத்து அணைவரினதும் திருவுருவப்படங்கள் உலகத் தமிழர் வரலாற்றுவளாக இளையோர்களின் இன்னியம் அணிவகுப்பு மரியாதையுடன் முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் தாங்கிக் கொண்டுவரப்பட்டு பொதுச்சுடர் மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து புரட்சி தலைமையில் மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

வீரவணக்க உரையினை இன்பன் மாஸ்டர், சிறப்பு உரையினை பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

மண்டப நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவீரர்கள் உடைய திருவுருவப்படங்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மாவீரர் துயிலுமில்ல பகுதிக்கு கொண்டுவரப்பட்டு நினைவு நடு கற்களில் படங்கள் நிலை நிறுத்தபட்டு பின் உறுதி ஏற்புடன் உரித்துடையோர்களிடம், பேழையில் வைக்கபட்ட தமிழீழ தேசிய கொடியும் மற்றும் மாவீரர் திருவுருவ படமும் கையளிக்கப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்