விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகளுக்கு யாழில் அஞ்சலி
jaffna
tribute
shavendrasilva
By Sumithiran
ஊர்காவற்றுறை அராலி பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன உட்பட அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் 29வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்து கொண்டார்.
இங்கு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய இராணுவத் தளபதி மதத் தலைவர்களின் ஆசியையும் பெற்றார்.
யாழ்.மாவட்டம் மீது படையினர் பாரிய தாக்குதலை அராலி ஊடாக நடத்துவதற்கான இறுதிக்கட்ட நகர்வை 08 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 1992 ஆம் ஆண்டு பார்வையிட சென்றபோதே இவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






1ம் ஆண்டு நினைவஞ்சலி