விடுதலைக்காக உயிரை விடத் துணிந்த ஈழ அகதிகள்! தொடரும் அவலம்
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி வயிற்றை கிழித்தும், கழுத்தை அறுத்தும் இலங்கை அகதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் உள்ளதால், தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மைக்காலமாக தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
விடுதலை வேண்டிய பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்த தாம் உயர் அதிகாரிகள் வழங்கிய போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டதாகவும், மனவிரக்தியில் இவ்வாறு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அச்சிறையில் வாடும் பாஸ்கரன் என்பவர் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
இன்று சிறையில் நடந்தது என்ன? இதற்கான பின்னணி என்ன? என்பதை தெளிவுபடுத்துகிறார் பாஸ்கரன்,