தலைவிதியை தீர்மானிக்க ஒரு மீட்பர் வருவாரா
நேற்று திருகோணமலையில் ஒரு சம்பவம்
புத்தருக்கு நிலத்தாசை ஊட்டு்ம் காவி உடுத்திய மனிதர்களின் ஆர்ப்பாட்ட அட்டகாசம் திருகோணமலை நகரின் ஆளுநர் அலுவலகம் முன்பாக நிகழ்த்தி முடிக்கப்பட்டது.
விகாரை அமைக்க தடைநீக்க வேண்டும் இதுதான் காரணம். ஆனால் இவர்கள் விகாரை அமைக்கத்துடிக்கும் பிரதேசம் 100 வீதம் தமிழர்கள் தனித்து வாழும் பகுதி. அதனால் புதிய விகாரை அமைக்க அங்கு வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனால், பிரதேச செயலாளர் புதிய விகாரை அமைக்கத்தடை விதித்தார்.
ஆளுநரும் சட்டவிரோதமாக மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் இடத்தில் விகாரை கட்ட தடை என்றார்.
ஏன் நாட்டின் நிறைவேற்று அதிகார அதிபரும் சொன்னார் புதிய வழிபாட்டிடங்களை அமைக்க அனுமதியில்லை என்று...
ஆனால்..
ஒரே ஒரு ஆர்ப்பாட்டம்.. இல்லை இல்லை ரகளை. மாவட்டத்தின் மிக உயர் சபையில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை வெருட்டி, அட்டாகாசம் புரிந்து விகாரைக்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கிக்கொண்டனர்.
இவை கோபப்படும் நடவடிக்கைகள் அல்ல. அதையும் கடந்து அருவருக்கும் செயற்பாடுகள் என்பவை இதுதான்.
இந்த நாட்டில் தேவையில்லாமல் தமிழர் ஆயுதம் ஏந்தினர் எனக்கூறுவோருக்கு இந்தச் செய்திகள் சென்று சேராது.
ஒன்று மட்டும் உறுதி 10 ஆண்டுகள் அல்ல, பத்தாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இலங்கை முன்னோறப்போவதுமில்லை - மக்கள் நிம்மதியாய் வாழப்போவதுமில்லை
விகாரைகள் முழைக்கும் தேசமிது! தமிழர்கள் இனி என்ன செய்ய முடியும்.
இனி இந்த நாட்டில் ஈழத்தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்க ஒரு மீட்பர் வருவாரா...