யாழில் விஷப்பாசி தாக்கத்தால் அறுவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் (Jaffna) - காரைநகர் - காசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கசூரினா சுற்றுலா மையமானது காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுவதால் இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியவேளை, “இன்றையதினம் (26) விஷப்பாசி தாக்கி ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தனக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு இது குறித்து தெரியப்படுத்தியதாகவும் கூறினார்.
அத்தோடு, விஷப்பாசியினை ஒழிப்பதற்கு வினாகிரி வாங்கி தருமாறு கோரப்பட்டதாகவும் தான் அதனை வாங்கி கொடுத்தாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
விஷப்பாசி தாக்கம்
மேலும், கடந்த நாட்களில் இவ்வாறான தாக்கம் எவையும் பதிவாகவில்லை என தெரிவித்த செயலாளர், திடீரென இன்றையதினமே இந்த விஷப்பாசி தாக்கம் இடம்பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.”
இந்நிலையில், இது குறித்து மேலதிக தகவல்களை பெறுவதற்கு காரைநகர் வைத்தியசாலையின் 0212211745 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் வைத்தியசாலை தரப்பினரை தொடர்புகொள்ள முடியவில்லை என எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |