டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 மையங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை, நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் வரி செலுத்துதலையும் எளிதாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அடையாள அட்டை இப்போது கொஞ்சம் பழையதாகிவிட்டது.
அவை கடந்த காலத்தில் செய்யப்பட்ட விஷயங்கள் இப்போது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இருந்தால் அதனால் நிறைய நன்மைகள் உண்டு.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை உருவாக்கத்திற்கு இந்தியா 1,000 கோடி உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அறிவியல் துறை
இந்தியா தரவுகளைத் திருடப் போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள் ஆனால் எதுவும் இல்லை.
இலங்கையில் தரவு அறிவியல் துறையில் மிகப்பெரிய நிபுணர்களுடன் ஒரு பட்டறை நடத்தினோம்.
நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தரவை உள்ளிட 2,300 மையங்கள் அமைக்கப்படுகின்றன ஆனால் தரவு உள்ளீட்டைப் பொறுத்தவரை இந்திய நிறுவனம் இதில் தலையிடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |