இல்லத்தை கொடுக்க மறுக்கும் மகிந்த : அநுர விடுத்த எச்சரிக்கை
நாட்டிலுள்ள சில ஊழல் அரசியல்வாதிகளால் இன்னும் தம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (26) தம்புத்தேகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னமும் சில ஊழல் அரசியல்வாதிகளால் மாற்றமடைய முடியவில்லை காரணம் அரச இல்லங்களை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தெரிவித்தால் பழிவாங்க முயற்சிக்கின்றோம் என தெரிவிக்கின்றனர்.
ஆடம்பரமான இல்லங்கள்
எங்களுக்கு யாரையும் பழிவாங்கும் நோக்கமோ அல்லது ஆத்திரமோ கிடையாது, அதற்கான தேவையும் கிடையாது.
இருவர் வாழ்வதற்கு அவ்வளவு ஆடம்பரமான இல்லங்கள் எதற்கு ? குறித்த இல்லங்கள் சாதாரணமாக கூட இல்லாமல் ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு அவ்வளவு பெரிது.
அவ்வளவு ஆடம்பரமான இல்லங்கள் எதற்கு ? இந்த இல்லங்களில் இருந்து மாறி வாசிக்க உங்களுக்கு வீடுகள் இல்லை என்றால் அதை தரவும் நாங்கள் தயாராக உள்ளோம் .
வழக்கு தாக்கல்
இதனை உரியவர்களுக்கு தெரிவிக்கும் போது வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவிக்கின்றனர், என்னதான் மாற்றமடைந்தாலும் சிலரை முழுதாக மற்றமைடைய வைக்க முடியவில்லை.
அத்தோடு, திருடர்களை என்ன செய்ய போகின்றீர்கள் என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர், விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில், முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர், அப்போது அமைச்சரை கைது செய்வது சரி, மனைவியை எதற்காக கைது செய்கின்றீர்கள் என சிலர் கேட்டனர்.
குடும்பமாக சேர்ந்து ஆட்சியில் ஈடுபடுபவர்களாக இருந்தால் விசாரணைகளுக்கும் குடும்பமாகத்தான் செல்ல வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |