மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகரும் அநுர அரசு !
இலங்கையின் பொருளாதாரம் என்றும் இல்லாத அளவில் மிகவும் சிக்கலான சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் (Amirthalingam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் என்பது எமக்கு மகவும் அவசரமாக தேவைப்படுகின்றது.
ஆகவே, டொலரை எவ்வாறு உள்ளே கொண்டு வருவது, இதே நேரம் மற்றைய நாடுகளுடன் முரண்படாமல் அடுத்தக்கட்ட நகர்வுகளை கொண்டு செல்வது என்பவை தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
அத்தோடு, இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் இவற்றையெல்லாம் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்பது தொடர்பில் யோசிப்பதுடன் வெளிநாட்டு டொலர் இலங்கைக்கு வரா விட்டால் இலங்கையால் இந்த சிக்கலில் இருந்த மீள்வது கடினம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தம், சர்வதேச நாடுகளின் தலையீடு, தமிழ் மக்கள் மீதான சர்வதேச நாடுகளின் எதிர்ப்பார்ப்பு மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |