தமிழர் தாயகத்தில் கிடைத்த பொக்கிஷம்! இலங்கையிடம் டீல் பேசும் இந்தியா
Trincomalee
Lakshman Kiriella
India
By Vanan
இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்வதன் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கைக்கு இந்திய பிரதிநிதிகள் விஜயம் செய்தால், எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கமாக அறிவிப்பர். ஆனால் இம்முறை இந்திய உயர்மட்ட குழு அவ்வாறு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்காக பல வேலைத்திட்டங்களை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளது. அத்தோடு திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினையும் கோரியுள்ளதாக தெரியவருகிறதென அவர் கூறினார். கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
