கிழக்கில் அமெரிக்க இந்திய படைத்தளம் - சீனன்குடா குறித்து புதிய சர்ச்சை..!
கிழக்கில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைத்து படைத்தளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இந்தோ பசுபிக் கடல்பரப்பின் அமெரிக்க இராஜதந்திரியான ஜெகடியா ரோயல் தலைமையிலான குழு கடந்த மாதம் திடீரெனெ கொழும்புக்கு சென்று திரும்பிய விடயம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய விமானப்படை தளபதி திருகோணமலையின் சீனன்குடா விமானப்படைத்தளத்திற்கு சென்று நேரடியாக பார்வையிட்டு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த பிரதேசத்தில் இந்தோ சிறிலங்கா நட்புறவு கேட்போர்கூடம் என்ற பெயரில் கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சிறிலங்கா அதிபர் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு சென்ற நிலையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
