உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிபதி கணேசராஜா பணி இடைநிறுத்தம்
Trincomalee
Sri Lanka Magistrate Court
By Sumithiran
திருகோணமலை(trincomale) மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு வியாழக்கிழமை (12) பணி இடைநீக்க கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் கேட்டு பணி இடைநீக்கம்
அவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு,அவரிடம் விளக்கம் கேட்டு அவரை பணி இடைநீக்கம் செய்தது.
அவரது இடத்திற்கு மாவட்ட நீதிபதியாக செயற்படுவதற்கு திருகோணமலை பிரதான நீதவான் இ.பயாஸ் ரசாக்(E. Payas Razaq) நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்