திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்
Trincomalee
Eastern Province
By Independent Writer
Courtesy: Buharys Mohamed
திருகோணமலை வைத்தியசாலையில் இன்று (13) வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை. எனினும் அவசர சேவைப்பிரிவு, களங்கள் மற்றும் பெரும்பாலான கிளினிக் என்பன வழமைபோல் இயங்கியதாக கூறப்படுகிறது.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி