அபிவிருத்தியை காணாத வீதி! 25 வருடங்களாக காத்திருக்கும் மக்கள் (காணொளி)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட இரண்டாம் குலனி பகுதியில் கடந்த இருபத்தைந்து வருடகாலமாக வீதி புனரமைத்து தரவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள் அம்மன் கோவில் வீதி , திருவள்ளுவர் வீதி ,குளக்கோட்டன் வீதி , சேர்ச் வீதி ,உப்பார் வீதி, போன்ற வீதிகள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை பள்ளமும் படு குழியுமாகவும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அவ் வீதி ஊடாக செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் எனப் பலரும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
அரசியல்வாதிகள் பொய் வாக்குகளை கொடுத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியதாகவும் குறித்த வீதி சம்பந்தமாக கந்தளாய் பிரதேச செயலகத்துக்கு ஆளுநருக்கு மற்றும் அதிபர் செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்த போதும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கந்தளாய் பேராறு வீதிகளை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |