கட்டண அதிகரிப்புக்களை நிறுத்தக் கோரி போராட்டம் முன்னெடுப்பு!
மின்சாரக் கட்டண அதிகரிப்பை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை திருகோணமலை மின் பாவனையாளர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் தீப்பந்தந்தை ஏற்றியவாறு கோசங்களை எழுப்பினர்.
மின் கட்டணத்தைக் குறை, மின் கட்டண அதிகரிப்பை நிறுத்து உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மின் பாவனை கட்டண அதிகரிப்பு, டீசல் எரிபொருள் தட்டுப்பாடு, அடிக்கடி மின் வெட்டு இவ்வாறு போனால் எங்களதும், விவசாயிகளினதும் நிலை என்னவாகும்.
நாளாந்தம் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றமும் சாதாரண பொது மக்கள் உட்பட அனைவரையும் பாதிக்க வைத்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.








