தமிழர் மற்றும் சிங்களவர்களிடையே இடம்பெற்ற மோதலின் பின்னணி என்ன - மூத்த சட்டத்தரணி பகிரங்க கருத்து!
திருகோணமலை மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு இன ரீதியான முரண்பாடு அல்ல என மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்த போது அதற்கு சிங்கள சட்டத்தரணிகளும் அதனை ஆமோதித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“திருகோணமலை திருக்கடலூர் விஜிதபுர பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கைகலப்பானது, இனப்பிரச்சனையை தோற்றுவிக்கின்ற முரண்பாடோ, குழப்பமோ அல்ல.
இன மோதல் அல்ல
மேலும் இந்த கைகலப்பானது சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சனை அல்ல. ஒரே தொழிலை மேற்கொள்ளுகின்ற இரு தரப்புக்கு இடையில் தொழில் ரீதியாக இடம்பெற்ற கைகலப்பு மட்டுமே.
ஆனால் காவல்துறையினர் இதனை இனப்பிரச்சினைகளை ஏற்படுத்தும் அம்சங்கள் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இது அவ்வாறான முரண்பாடு இல்லை.
காவல்துறையின் பார்வை
எனவே சமூகத்தின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தி இதனை சட்ட ரீதியாக அணுகியுள்ளோம்” எனவும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
