திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல்
Trincomalee
Media
By Laksi
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல் வைபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று (21) இந்த ஒன்று கூடல் வைபவம் நடைபெற்றது.
ஏற்பாடு
இந் நிகழ்வினை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC)ஏற்பாடு செய்திருந்தது.

சிரேஷ்ட ஊடகர்களின்
இக்கட்டான கால சூழ் நிலையில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகர்களின் அனுபவப் பகிர்வும் இதன்போது இடம்பெற்றதுடன் கடந்த யுத்த கால கட்டத்தில் திறம்பட பணியாற்றிய ஊடகவியலாளர்களின் பணி பற்றியும் பாராட்டப்பட்டு பேசப்பட்டது.

நாட்காட்டியும் வழங்கி வைக்கப்பட்டது
ஊடகவியலாளர்களுக்கான 2024ம் ஆண்டுக்கான நாட்காட்டியும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா உட்பட சுமார் 30க்கும் உட்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு… 19 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்